உலக எய்ட்ஸ் தினம் 01.12.2013
Shared
உலக எய்ட்ஸ் தினம்
ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு
கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
எய்ட்ஸ் நோய் மற்றும்
அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சர்வதேச எய்ட்ஸ் தினம்
அனுஷ்டிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் நாள் பற்றிய
எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற,
எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு
அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும்
நடைமுறைப்படுத்தி வருகின்றன.
1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை
எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களுக்கு மேல். 2007-ஆம் ஆண்டு வரை 332
லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்நோய்
வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின்
மையக் கருத்து “புதிய எச்.ஐ.வி. தொற்று இல்லாத, புறக்கணித்தல்
இல்லாத மற்றும் எய்ட்ஸ் மூலம் இறப்பில்லாத நிலையை ஏற்படுத்துதல்” என்பதாகும்.
No comments:
Post a Comment