Sunday, 1 December 2013

இந்தியாவின் 15-வது பிரதமர் ஐ.கே.குஜ்ரால் மறைந்த தினம் (நவ.30, 2012)



இந்தியாவின் 15-வது பிரதமரான ஐ.கே.குஜ்ரால் பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் 1919-ம் ஆண்டு பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்திராகாந்தியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக பதவியேற்றார். பின்னர் சில காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டார். சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராகவும் நியமிக்கப்பட்டார். 

1980-களின் நடுவில் காங்கிரஸ் கட்சியை விட்டு ஜனதா தளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். ஈராக் அதிபர் சதாம் உசேனை நேராக சந்தித்து பேசியவர். 1992-ம் ஆண்டு இந்தியாவின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997-ல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால் அரசு கவிழும் நிலை உருவானது. பின்னர் உடன்பாடு ஏற்பட்டு, வெளியிலிருந்து ஐக்கிய முன்னணியை ஆதரிக்க காங்கிரஸ் முன்வந்தது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்து அவரை பிரதமராக ஆக்கியது. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே தேதியில் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்

No comments:

Post a Comment