Sunday, 1 December 2013

ஜகதீஸ் சந்திரபோஸ் பிறந்த நாள் 30.11.2013


நன்றி விக்கிபீடியா
இந்தியாவின் வங்க தேசத்தில் விக்கிரம்பூர் எனும் பகுதியில் கிபி 1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் பகவான் சந்திர போஸ் என்பவருக்கு மகனாக ஜகதீஸ் பிறந்தார்.
ஸி ஸ் படிப்பினை படிக்க இங்கிலாந்திற்கு ஜகதீஸ் சந்திரபோஸ் சென்று, அங்கு மருத்துவப் படிப்பினைத் தொடராமல் விஞ்ஞானத்தினை படித்தார்.

1894ல் ஜகதீஸ் சந்திரபோஸ் ஒளியியல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு, அதில் மின்சாரம் பற்றிய தனது ஆய்வினை இராயல் சொசைட்டிக்கு ஜெகதீஸ் அனுப்பினார், அந்த ஆய்வினைக் கண்டு பாராட்டி நூலாக இராயல் சொசைட்டி வெளியிட்டு மகிழ்ந்தது,
கண்களுக்கு புலனாகும் ஒளி அலைகள் மற்றும் புலனாகாத ஒளி அலைகள் பற்றியும் தெளிவாக காண்பதற்கு ஜெகதீஸ் ஒரு கருவியை உருவாக்கி, அக்கருவிக்கு செயற்கைக் கண் என்று பெயரிட்டார்.
அத்துடன் செடிகொடிகள் பற்றிய ஆய்வுகள் பலவற்றை செய்து, முதன்முதலாக தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்ற அறிவியல் கண்டுபிடிப்பினை விஞ்ஞானிகளிடம் விளக்கினார், ஜெகதீஸின் கூற்றினை புறக்கணித்த விஞ்ஞானிகள், கிபி 1902 - பிப்ரவரி 21ல் லின்னியன் சங்கத்தில் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றனர்.

ஜெகதீஸ் சந்திரபோஸ் பல ஆண்டுகாலம் ஆய்வில் ஈடுபட்டு கிடைத்த ஆய்வின் முடிவுகளை வேறொருவர் சொந்தம் கொண்டாடினர், அதில் விஞ்ஞானிகள் தலையிட்டு ஜகதீஸின் ஆய்வின் முடிவு தன்மையை ஜகதீஸிற்கு ஒப்படைத்தனர்.

அத்துடன் கிபி 1917 ஆம் ஆண்டு போஸ் ஆராய்ச்சி மையம் என்ற அறிவியல் ஆய்வு மையத்தினை பெரும் பொருட்செலவில் ஜகதீஸ் திறந்தார் . கிபி 1931 நவம்பர் 11ல் விஞ்ஞானி ஜகதீஸ் சந்திரபோஸ் மறைந்தார்.


No comments:

Post a Comment