நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
நவம்பர் 25ம் நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும். டொமினிக்கன் குடியரசில்
Dominican Republic, 1960 நவம்பர் 25 இல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின்
Rafael Trujillo (1930-1961). உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே விசேடமாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்"
என்று பின்னர் உலகில் பிரபல்யமான இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.
1980 ஆம் ஆண்டு முதல் அந்தத் தினம் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் நாள் முடிவடையும்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
பெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பாடசாலைகளில்... இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகளாவிய ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இதனை மிகவும் பரந்தளவில் நோக்க வேண்டும். கடந்த ஒரு சில தசாப்தங்களில் நிலைவரங்களில் சில வகை மேம்பாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இந்த நெருக்கடியின் கொடூரத்தன்மை இன்னமும் பெருமளவுக்கு ஒப்புக் கொள்ளப்படாததாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று வரும் போது உலகில் நாகரிகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை"
என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஒருதடவை குறிப்பிட்டிருந்ததை இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
பெண்கள் மீதான வன்முறையை முற்றிலுமாக தடுப்பதற்கு, குற்றவாளிகளுக்கு
கடுமையான தண்டனைகள் அவசியம். இதற்கு அதிகார மையங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க
வேண்டும் அப்போதுதான் இது சாத்தியம். ஆட்சி அதிகாரங்களில் பெண்களுக்கு சம அதிகாரம்
வழங்க வேண்டும். பெண்களை பாதுகாக்க நாட்டில் பல சட்டங்கள் இயற்றப்பட்டும், பாதிக்கப்பட்ட
பெண்கள் பெரும்பாலும் புகார் கூற முன்வருவதில்லை என்பது வருந்தத்தக்கது. பாதிக்கப்படும்
பெண்கள் எதிர்த்து நின்று போராடும் போது தான், அவர்களுக்கு தீர்வு ஏற்படும்.
No comments:
Post a Comment