மகாத்மா
ஜோதிராவ் பீலே நினைவு தினம் 28.11.2013
நன்றி
விடுதலை.
அம்பேத்கர் தோன்றிய அதே மகாராட்டிரத்தில்
அம்பேத்கர், பெரியார் போன்ற 20ஆம் நூற்றாண்டு
சமூகப் புரட்சியாளர்-களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே.
ஜோதிராவ்
பூலே அவர்கள் 1827 ஆம் ஆண்டில் மகாராட்டிரத்தில்
உள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள
லால்கன் என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
மகாராட்டிரத்தின் ஒடுக்கப்பட்ட ஜாதிப் பிரிவுகளில் ஒன்றான
மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர்.
இளமைப் பருவம்தொட்டே சீர்திருத்த எண்ணங்கள் முளைவிடத் தொடங்கியது; அதற்குக் காரணம், சிறுபிராயமாக அவர்
இருந்தபோது ஆதிக்க ஜாதியினரின் ஒடுக்குமுறைகளால்
அவர் குடும்பமும், அவரும்பட்ட இன்னல்கள் பின்னாளில் அவரை ஓர் சமூகப்
புரட்சியாளராக மாற்றியது.
பெண்கள்
மற்றும் தாழ்த்தப்பட்டோர் எனப்பட்டோர் கல்வி பெறுவதன் மூலமே
சமூகத்தில் உயர்நிலை எய்த முடியும் என
உறுதியாக நம்பினார். எனவே, மிகவும் தாழ்த்தப்-பட்ட ஜாதியினரின் பெண்
குழந்தைகளுக்கான பள்ளியை 1848 ஆம் ஆண்டில் இந்தியாவில்
முதன்முதலாகத் தொடங்கினார். அப்பள்ளியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மகார், மாங் போன்ற
பிரிவுப் பெண்களுக்கு முன்னுரிமை தந்தார். எனினும், உயர்ஜாதியினரின் மிரட்டல்களால் அப்பள்ளிக்கு ஆசிரியர்கள் கிடைக்காதநிலை ஏற்பட்டபோது தன் மனைவி சாவித்திரிக்குக்
கல்வி புகட்டி அவரை அப்பள்ளியின்
ஆசிரியராக்கினார். அதுமட்டுமின்றி, தன்வீட்டுக் குடிநீர்க் கிணற்றை, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் திறந்துவிட்டார். இன்றும்-கூட இச்செயல்
அசாதாரணமான, தீரமான ஒன்றாகும்.
பெண்
கல்வியை ஆதரித்த பூலே அவர்கள்
1851ஆம் ஆண்டில் அனைத்து ஜாதிப்
பெண்களுக்குமான பள்ளியைத் தொடங்கினார்; 1855 இல் மாலை நேரப்
பள்ளி ஒன்றையும் தொடங்கினார். பெண் விடுதலை என்று
குறிப்பிடாத பூலே ஆண் - பெண்
இருவருக்குமான சமமான மனித உரிமைகள்
வேண்டுமென்று வலியுறுத்தினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பூலே குழந்தைத்
திருமணத்தை எதிர்க்கவும் தயங்கவில்லை.
பெண்கள்,
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் நலன் காக்கவும், அவர்களின்
நிலை உயரவும் பள்ளிகளைத் தொடங்கி
அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பூலே 1873ஆம் ஆண்டு செப்டம்பர்
24ஆம் தேதியன்று சத்ய சோதக் சமாஜ்
(உண்மை தேடுவோர் சங்கம்) என்னும் சங்கத்தைத்
தொடங்கினார். இச்சங்கம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, கல்வியைப் பரப்பல்,
விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகித ஒழிப்புத் திருமணங்களை
நடத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகளைப்
போக்கல், உழவுத் தொழிலை மேம்படுத்தல்
ஆகிய சமூகப் பொருளியல் காரணங்களுக்காகப்
பாடுபட்ட இவ்வமைப்பே இந்திய மண்ணில் சமூக
நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கி முன்னெடுத்துச் சென்றது.
(க. நெடுஞ்செழியன், சமூகநீதி, ப.154-155).
அதோடன்றி,
1888ஆம் ஆண்டு மே மாதம்
11ஆம் நாளில் பூனேயில் நடந்த
பொதுக்கூட்டத்தில், பூலேயின் கொள்கைச் செயல்பாட்டையும், சீர்திருத்த நடவடிக்கை-களையும் பாராட்டி அவருக்கு,
மகாத்மா என்ற பட்டம் சூட்டப்பட்டது.
மராட்டிய மண்ணில் கொள்கை முழக்கம்
செய்தும், அறிவுபுகட்டியும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட
மகாத்மா பூலே 1890ஆம் ஆண்டு மறைந்தார்.
வரலாறு
பல சமயங்களில் உன்னதப் பதிவுகளைத் தவறவிட்டிருப்பதற்கு
மகாத்மா ஜோதிராவ் பூலே ஒரு சிறந்த
உதாரணம். பூலே அவர்களின் பெயர்கூட
இன்று நம்மில் பலருக்குத் தெரியாது
என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் பூலே
போன்ற சமூக நீதிப் போராளிகள்
புறக்கணிக்கப்படுகிறார்கள்.
பூலே போன்ற சமூக நீதிப்
போராளிகளையும், அவர்தம் கொள்கைகளையும், வளரும்
இளைய சமூகத்திற்குத் தெரியப்படுத்தாமல் சமூக நீதியை வென்றெடுக்க
முடியாது. சமூக ஏற்றத் தாழ்வுகளற்ற
சமுதாயம் அமைய, அந்த ஏற்றத்
தாழ்வுகள் நீங்கப் போராடியவர்களின் வரலாற்றை
நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும்.
அல்லாமல், சமூக ஒருமைப்பாடு, சமத்துவ
சமுதாயம் என்பவைகளெல்லாம் வெறும் பகற்கனவாகவே!
- க. சக்திவேல் எம்.ஏ.பி.எட்
No comments:
Post a Comment