Friday, 29 November 2013

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம்27.11.2013


நவம்பர் 27: விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர். எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார்
மனிதர்; கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை பிடிக்க முடியாததால் பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார்

இந்திராவின் மறைவுக்கு பிந்திய ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார், அம்பானிக்களை நோண்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார்.

காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். .போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.

தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின்  நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார்.

இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். தன் நிலத்தில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுத்த அவர் மண்டல் கமிஷனின் பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன. சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார்.

 காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததும் இவரே.

ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது , மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். தபோவனத்து முனிவர் போல வாழ்ந்த அவர் இதே நாளில் மரணம் அடைந்தார்.
பூ.கொ. சரவணன்


No comments:

Post a Comment